வாரம் 1: வீட்டுப்பாடம்
உரையாடல் பயிற்சி: (3-4 நிமிடங்கள்)
ஆசிரியர் உரையாடல் தலைப்பைக் கொடுக்கலாம். அல்லது மாணவர் உரையாடல் தலைப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.
மாணவர்கள் தலைப்பிற்கேற்ப பெற்றோர், உறவினர் அல்லது நண்பர்களுடன் பேசித் தமிழில் கலந்துரையாடி, அதை ஒலிப்பதிவு செய்து ஆசிரியருக்கு அனுப்பவும்.
மாணவர்கள் தனியாகவும் பேசலாம்.
உரையாடல் பதிவேட்டில் பெற்றோர் கையொப்பம் இடவேண்டும்.
ஒருமுறை பயன்படுத்திய தலைப்பை மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
எழுத்துத் தமிழில் பேசுவதைக் கூடியவரை தவிர்க்கவும். ஓரிரு சொற்கள் ஆங்கிலத்தில் பேசுவது தவறில்லை.
குறிப்பு: உரையாடல் தலைப்பு உதாரணங்கள் பாடத்திட்டத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் அதனைத் தேவைக்கேற்பப் பயன்படுத்தலாம்.
15 நிமிட வாசித்தல் பயிற்சி
பாடம் 1.2: வாசிப்போம் - மகிழ்ச்சியான நாள் கதையைப் படித்துத் தலைப்பை வாசிப்புப் பயிற்சி பதிவேட்டில் எழுதவும்.
பெற்றோர் வாசித்தல் அட்டவணையில் கையொப்பம் இட வேண்டும்.
மாணவர்கள் படித்த பத்தியிலிருந்து ஏதேனும் மூன்று வாக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதவும்
வாக்கியம் அமை
Refer to குறிப்பளிக்கும் உத்திகள்/இலக்கணக் குறிப்புகள்
வாக்கியம் ‘யார், ஏன், எதை, எப்படி, எங்கே, எப்போது’ ஆகிய கேள்விகளில் குறைந்தபட்சம் மூன்று கேள்விகளுக்குப் பதில் தரும் வகையில் அமைய வேண்டும்.
ஓய்வு - Leisure/Rest
கடற்கரை - Beach
மகிழுந்து - Car
உணவு - Food
நண்பகல் - Noon
உதாரணம்: அன்பன் தமிழ்த் தேர்வில் வெற்றி பெறப் பள்ளியில் தினமும் நன்றாகப் படித்தான்.
யார் - அன்பன்
எதை - தமிழ்த் தேர்வில்
ஏன் - வெற்றி பெற
எங்கே - பள்ளியில்
எப்போது - தினமும்
எப்படி - நன்றாக
என்ன (வினை) - படித்தான்
வேற்றுமை உருபுப் பயிற்சி பாடத்தில் உள்ள ஏதேனும் ஒரு பெயர்ச்சொல்லுடன் வேற்றுமை உருபுகளை இணைத்து அட்டவணையை எழுதவும்.
ஏதாவது 2 வேற்றுமை உருபை வாக்கியத்தில் அமைக்கவும். எடுத்துக்காட்டு: இது கண்ணனது புத்தகம். கண்ணனுக்கு லட்டு பிடிக்கும்.
சென்ற வாரம் மாணவர்கள் வாக்கியம் அமைக்கப் பயன்படுத்திய வேற்றுமை உருபுகளை இந்த வாரம் பயன்படுத்தக் கூடாது.
எடுத்துக்காட்டு:
கண்ணன் + ஐ = கண்ணனை
கண்ணன் + ஆல் = கண்ணனால்
கண்ணன் + ஓடு = கண்ணனோடு
கண்ணன் + உடன் = கண்ணனுடன்
கண்ணன் + கு = கண்ணனுக்கு
கண்ணன் + இன் = கண்ணனின்
கண்ணன் + அது = கண்ணனது
கண்ணன் + இல் = கண்ணனில்
கண்ணன் + இலிருந்து = கண்ணனிலிருந்து
கண்ணன் + உடைய = கண்ணனுடைய
கண்ணன் + இடம் = கண்ணனிடம்
கண்ணன் + ஆ = கண்ணனா!
கண்ணன் + ஏ = கண்ணனே!