வாரம் 6: வீட்டுப்பாடம்
Study Thirukural #1
உரையாடல் பயிற்சி: (3-4 நிமிடங்கள்)
ஆசிரியர் உரையாடல் தலைப்பைக் கொடுக்கலாம். அல்லது மாணவர் உரையாடல் தலைப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.
மாணவர்கள் தலைப்பிற்கேற்ப பெற்றோர், உறவினர் அல்லது நண்பர்களுடன் பேசித் தமிழில் கலந்துரையாடி, அதை ஒலிப்பதிவு செய்து ஆசிரியருக்கு அனுப்பவும்.
மாணவர்கள் தனியாகவும் பேசலாம்.
உரையாடல் பதிவேட்டில் பெற்றோர் கையொப்பம் இடவேண்டும்.
ஒருமுறை பயன்படுத்திய தலைப்பை மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
எழுத்துத் தமிழில் பேசுவதைத் கூடியவரை தவிர்க்கவும். ஓரிரு சொற்கள் ஆங்கிலத்தில் பேசுவது தவறில்லை.
குறிப்பு: உரையாடல் தலைப்பு உதாரணங்கள் பாடத்திட்டத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் அதனைத் தேவைக்கேற்பப் பயன்படுத்தலாம்.
15 நிமிட வாசித்தல் பயிற்சி
பாடம் 1.6: நற்பண்புமிக்க நந்தா கதையைப் படித்து தலைப்பை வாசிப்புப் பயிற்சி பதிவேட்டில் எழுதவும்.
பெற்றோர் வாசித்தல் அட்டவணையில் கையொப்பம் இட வேண்டும்.
மாணவர்கள் படித்த பத்தியிலிருந்து ஏதேனும் மூன்று வாக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதவும்.
வாக்கியம் அமை
வாக்கியங்களில் குறைந்தபட்சம் 4-5 சொற்கள் தேவை.
வாக்கியம் ‘யார், ஏன், எதை, எப்படி, எங்கே, எப்போது’ ஆகிய கேள்விகளில் குறைந்தபட்சம் மூன்று கேள்விகளுக்குப் பதில் கூறும் வகையில் அமைய வேண்டும்.
குடும்பத்தினர் - Family (members)
வட்டாரம் - Circle/Area
கலைநிகழ்ச்சி - Art show
தைரியம் - Courage
அச்சம் - Fear
வேற்றுமை உருபு பயிற்சி பாடத்திட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு பெயர்ச்சொல்லுடன் வேற்றுமை உருபுகளை இணைத்து அட்டவணையை எழுதவும்.
ஏதாவது 2 வேற்றுமை உருபு வாக்கியத்தில் அமைக்கவும்.
எடுத்துக்காட்டு: இது கண்ணனது புத்தகம். கண்ணனுக்கு லட்டு பிடிக்கும்.
சென்ற வாரம் மாணவர்கள் வாக்கியம் அமைக்கப் பயன்படுத்திய வேற்றுமை உருபுகளை இந்தவாரம் பயன்படுத்தக் கூடாது.